சீன-அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2022-11-22 18:28:03

9ஆவது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் விரிவாக்கக் கூட்டத்தில் பங்கேற்க கம்போடியாவில் பயணித்துள்ள சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் ஹெ அழைப்பை ஏற்று நவம்பர் 22ஆம் நாள் அமெரிக்க தேசிய பாதுபாப்பு அமைச்சர் லாய்ட் ஓஸ்டினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாட்டு இராணுவங்களுக்கிடையேயான உறவின் வளர்ச்சிக்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால், அமெரிக்கா சீனாவின் மைய நலன்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும், அமெரிக்கா சொல்லும் செயலும் ஒன்றாக இருந்து, வாக்குறுதியைப் பின்பற்றி, இரு நாட்டு உறவை சீரான மற்றும் நிலையான வளர்ச்சி பாதைக்குத் திரும்ப செய்வதற்கு பாடுபட வேண்டும் என்று சீனா விரும்புவதாகவும் வெய் ஃபெங் ஹெ தெரிவித்தார்.

மேலும், சீனாவின் மைய நலன்களில் மையப் பகுதி தைவான் விவகாரம் தான். இது, சீன-அமெரிக்க உறவில் தாண்டக் கூடாத கோடாகும். தாய்நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதில் சீன இராணுவப்படைக்கு திறனும் நம்பிக்கையும் உண்டு என்றும் அவர் கூறினார்.

தவிரவும், இரு நாட்டு தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒருமித்த கருத்துக்களை இரு நாட்டு இராணுவங்களும் உணர்வுப்பூர்வமாக செயல்படுத்தி, தொடர்பை நிலைநிறுத்தி, நெருக்கடிகளை மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்தி, பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைப்புத் தன்மையைப் பேணிக்காக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.