கடும் விபத்து ஏற்படாமல் உறுதியாக தவிர்க்க வேண்டும்: ஷிச்சின்பிங்
2022-11-22 18:45:35

நவம்பர் 21ஆம் நாள் மாலை 4மணியில் சீனாவின் ஹெநான் மாநிலத்தின் யன்யாங் நகரிலுள்ள கைய்ஷின்டா எனும் வணிக நிறுவனத்தின் ஆலை தீ விபத்துக்குள்ளானது. இதுவரை அதில் 38பேர் உயிரிழந்தனர். 2பேர் காயமடைந்தனர்.

விபத்து ஏற்பட்ட பின், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முக்கிய உத்தரவிட்டு கூறுகையில், ஹெநான் உள்ளிட்ட இடங்களில் விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்து பெரும் காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களை முழு மூச்சுடன் மீட்புதவி மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்துக்கான காரணத்தை விசாரணை செய்து சட்டத்தின்படி கண்டிப்பான முறையில் ஏற்க வேண்டிய பொறுப்பை ஆய்வு செய்ய வேண்டும். மக்களையும் உயிரையும் எப்போதும் முதலிடத்தில் வைத்து பல்வேறு பிரதேசங்கள் மற்றும் தொடர்புடைய துறைகள் உற்பத்திப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெரிய விபத்து ஏற்படாமல் உறுதியாக தவிர்க்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.