மாறி வரும் சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சி
2022-11-22 12:26:13

மாறி வரும் சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி ஒத்துழைப்பு என்ற தலைப்பில் 2022ஆம் ஆண்டு ஃபைனான்சியல் ஸ்ட்ரீட் கருத்தரங்கு 21ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது.

இத்தலைப்பு குறித்து பெய்ஜிங் நகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளர் கூறுகையில், நிதித் துறையின் சீர்திருத்தப் புத்தாக்கத்தை ஆழமாக்கி, மேலும் உயர்நிலை வெளிநாட்டு நிதித் திறப்பு அளவை விரிவாக்கி, சர்வதேச நிதி மேலாண்மையில் ஆக்கமுடன் பங்கெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சீன மத்திய வங்கியின் தலைவர் கூறுகையில், வேளாண்துறை, கிராமப்புறம், விவசாயிகள் ஆகிய மூன்று தரப்புகள், சிறிய மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், அரசு சாரா தொழில் நிறுவனங்கள் முதலிய துறைகளுக்கான நிதி சேவையை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

சீனப் பங்குப் பத்திர ஒழுங்குமுறைப் பணியகத்தின் தலைவர் கூறுகையில், மூலதனச் சந்தையின் விதிகளை, சீனச் சந்தையின் நடைமுறையுடன் இணைத்துச் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.