சந்திரனுக்கு விண்வெளி வீரரை அனுப்பும் புதிய தலைமுறை ஏவூர்தி 2030க்குள் தயாரிக்கப்படும்:சீனா
2022-11-22 17:14:29

சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் விதமாக, சீனாவின் புதிய தலைமுறை ஏவூர்தியின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்புப் பணி 2030ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும். அதிக சுமையை ஏற்றிச் செல்லும் ஏவூர்தியின் ஆய்வு மற்றும் கட்டமைப்பில் சீனா குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது என்று ஹாய்கோ நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2022ஆம் ஆண்டு சீன விண்வெளி மாநாட்டில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.