நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்து இந்தோனேசிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் ஆறுதல் செய்தி
2022-11-22 19:50:13

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 22ஆம் நாள் அந்நாட்டு அரசுத் தலைவர் ஜோக்கா விடோடோவுக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.

இதில் அவர் கூறுகையில், இந்தோனேசியாவில்  நிகழ்ந்த நிலநடுக்கம் சீற்றத்தால், கடும் உயிர் மற்றும் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து கொண்டேன். சீன அரசு மற்றும் மக்களின் சார்ப்பில், உயிரிழந்தோருக்கு இரங்கலையும், அவர்களின் குடும்ப உறுப்பினருக்கும் காயமுற்றவர்களுக்கும் ஆறுதலையும் தெரிவிக்கிறேன். அரசுத் தலைவர் ஜோக்கா மற்றும் அரசின் தலைமையில், மக்கள் சீற்றத்தை வென்று, தாயகத்தை மறுசீரமைக்க முடியும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.