சீனத் தொலை உணர்வறி தரவுகள் மற்றும் பயன்பாட்டுச் சேவை மேடை வெளியீடு
2022-11-22 10:56:23

சீனத் தொலை உணர்வறி தரவுகள் மற்றும் பயன்பாட்டுச் சேவை மேடையின் வெளியீடு மற்றும் தேசிய விண்வெளி ஆய்வுப் பணியகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தின் திறப்பு விழா 21ஆம் நாள் ஹாய் கோ நகரில் நடைபெற்றது. தேசிய நிலை பன்னோக்கத் தொலை உணர்வறி வளங்களின் பகிர்வு மற்றும் பயன்பாட்டுச் சேவை அமைப்பு முறையை உருவாக்குவது, இவற்றின் நோக்கமாகும்.

உள்நாட்டு அரசு, அறிவியல் ஆய்வு நிறுவனம், தொழில் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, வெளிநாட்டு அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான பன்னோக்கப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் முன்னெடுத்து, விண்வெளித் துறையில் சீனாவின் சர்வதேசச் செல்வாக்கை அதிகரிக்கப் பாடுபட வேண்டும் என்று சீன விண்வெளி ஆய்வுப் பணியகத் தலைவர் ச்சாங் கெ ஜியேன் இவ்விழாவில் தெரிவித்தார்.