சீன-ஜப்பான் கடல் விவகாரம் -14வது உயர்நிலை கலந்தாய்வு கூட்டம்
2022-11-23 10:11:54

சீன வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல் விவகாரப் பிரிவின் தலைவர், ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய-அட்லாண்டிக் பிரிவின் தலைவர் ஆகியோர், சீன-ஜப்பான் கடல் விவகாரங்களின் 14வது உயர்நிலை கலந்தாய்வு கூட்டத்துக்கு 22ஆம் நாள் தலைமை தாங்கினர்.

முழு அமர்வும், கடல் பாதுகாப்பு, கடல் பரப்பில் சட்ட அமலாக்கம் மற்றும் கடல் பொருளாதாரம் ஆகியவை தொடர்பான கூட்டங்களும் நடத்தப்பட்டன. இரு நாட்டுத் தலைவர்கள் பாங்காங்கில் எட்டிய முக்கிய பொது கருத்துகளைச் செயல்படுத்துவதற்கு இரு தரப்புகள் சம்மதம் தெரிவித்தனர்.

தியோயூ தீவு, தென்சீனக் கடல் முதலிய பிரச்சினைகள் குறித்த நிலைப்பாட்டை சீனா மீண்டும் உறுதிப்படுத்தியது. தவிரவும், கடலில் ஜப்பான் அணு கழிவு நீர் வெளியேற்றுவது குறித்து சீனாவின் கருத்தும் தெரிவிக்கப்பட்டது. மேலும் விரிவான ஒத்துழைப்பு குறித்து 6 ஒத்த கருத்துகள் எட்டப்பட்டுள்ளன.