அறிவுசார் சொத்துரிமை விண்ணப்ப எண்ணிக்கையில் ஆசியா அதிக பங்கு
2022-11-23 11:28:29

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டு கரோனா பாதிப்புக் காரணமாக உலகளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், தனிக்காப்புரிமை, வணிகச் சின்னம், உருவ வடிவமைப்பு ஆகிய துறைகளில் அறிவுசார் சொத்துரிமைக்காண விண்ணப்பங்கள் தீவிரமாக அதிகரித்து புதிய பதிவை எட்டியுள்ளன. பிரதேசவாரியாகப் பார்த்தால் முறையே சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை முன்னணியில் உள்ளன. மேலும், சீனா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை முறையே 5.5, 2.5 மற்றும் 5.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

2021ஆம் ஆண்டில் உலகளவில் சமர்பிக்கப்பட்ட 34 இலட்சம் விண்ணப்பங்களில் ஆசியாவிலிருந்து வந்த விண்ணப்பங்கள் மட்டும் 67.6 விழுக்காடு வகித்தது குறிப்பிடத்தக்கது.