அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை என்ற தொற்று நோயைத் தீர்க்கக் கூடிய மருத்துவர் தோன்றவில்லை
2022-11-23 19:25:13

22ஆம் நாள் செவ்வாய்கிழமை அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்திலுள்ள பேரங்காடி ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலருக்கு காயம் மற்றும்  உயிரிழப்பு ஏற்பட்டது. 3 நாட்களுக்கு முன்பு, கொலராடோ மாநிலத்தில் இரவு விடுதி ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில்  5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் இடைக்கால தேர்தல் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, தூப்பாக்கி வன்முறை பற்றிய விவாதம் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் பேசுகையில்  துப்பாக்கி வன்முறை என்ற தொற்று நோயைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், மீண்டும் மீண்டும் தூப்பாக்கிச் சூடு ஒலியைக் கேட்ட பொது மக்கள்,  அமெரிக்கா பாணியிலான தொற்று நோய் மேலும் தீவிரமாகியுள்ளது என்று உணர்கின்றனர்.

இது வரை தீர்க்க முடியாத அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறைப் பிரச்சினை,  அந்நாட்டின் தூப்பாக்கிப் பண்பாடு என்பதுடன் தொடர்பு உடையது.  அந்நாடு சுதந்திரம் பெற்றதன் முக்கிய காரணங்களில் ஒன்றாக,  மக்களால் துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள முடிந்தது. 1971ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்க அரசியல்அமைப்பு சட்டத்தின் திருத்தத்தில், மக்கள் துப்பாக்கிகளை வைத்துக்கொள்ளும் உரிமை பாதுகாக்கப்படும் என்று விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தூப்பாக்கிப் பண்பாடு அமெரிக்க சமூகத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அமெரிக்கா, துப்பாக்கி வன்முறை என்ற தொற்று நோயை எதிர்கொள்கிறது. ஆனால், தீர்வு வழங்கும் மருத்துவர் தற்போது வரை இன்னும்  தோன்றவில்லை.