சீன-காங்கோ ஜனநாயக குடியுரசு உறவு இயல்பாகிய 50ஆவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து
2022-11-24 18:40:43

சீனா- காங்கோ ஜனநாயக குடியரசு உறவு இயல்பாகிய 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் காங்கோ ஜனநாயக குடியரசுத் தலைவர் ஃபெலிக்ஸ் ஷிசேகெடியும் 24ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.

கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறும் நெடுநோக்குக் கூட்டாளியுறவை உருவாக்கியுள்ளன. இரு நாடுகளின் ஒத்துழைப்புகளில் நிறைய சாதனைகள் எட்டப்பட்டு,  இரு நாட்டு மக்களுக்கு நன்மைகள் அளிக்கப்பட்டுள்ளன. அரசுத் தலைவர் ஷிசேகெடியுடன் இணைந்து இரு நாட்டுறவு இயல்பாக இருந்ததன் 50ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு  இரு தரப்புறவின் புதிய நிலையை உருவாக்க விரும்புவதாக ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.

இரு நாடுகளின் பாரம்பரிய நட்புறவைத் இடைவிடாமல் ஆழமாக்கி, காங்கோ ஜனநாயக குடியுரசு மற்றும் சீனா இடையேயான நெடுநோக்குக் கூட்டாளியுறவு புதிய சாதனைகள் படைக்கவும், இரு நாட்டு மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தவும் பாடுபடுவதாக ஷிசேகெடி விருப்பம் தெரிவித்தார்.