மத்திய தூர எறிவிசை ஏவுகணையைச் சோதனை செய்த இந்தியா
2022-11-24 09:58:40

ஓடிசாவில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவிலிருந்து அக்னி 3 மத்திய தூர எறிவிசை ஏவுகணையை இந்தியா 23ஆம் நாள் வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது என்று இந்திய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இந்திய தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு சுயமாக ஆராய்ந்த தயாரித்த ஏவுகணை அக்னி 3 ஏவுகணை ஆகும். 3000 முதல் 5000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை 2011ஆம் ஆண்டில் ராணுவப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.