அரசின் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தக் கூடாது:பிரிட்டன் உச்ச நீதிமன்றம்
2022-11-24 10:57:03

பிரிட்டன் அரசின் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பை ஸ்காட்லாந்து நடத்தக் கூடாது என்று பிரிட்டனின் உச்ச நீதிமன்றம் 23ஆம் நாள் தீர்ப்பு அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு சுதந்திரத்துக்கான 2ஆவது பொது வாக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஸ்காட்லாந்து அரசின் முதலமைச்சர் நிக்கொலா ஸ்ட்ச்சின் இவ்வாண்டின் ஜுன் மாதத்தில் அறிவித்தார். ஆனால், அப்போதைய தலைமையமைச்சர் ஜோசனிடம் நிக்கொலா கடிதம் மூலம் அனுமதி கேட்ட போது நிராகரிக்கப்பட்டார். பிறகு இந்த வாக்கெடுப்பு சட்டப்பூர்வமானதா இல்லையை என்பது பற்றி ஸ்காட்லாந்து, பிரிட்டன் உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்டது.

பிரிட்டன் அரசின் அங்கீகாரம் பெற்ற நிலையில், பிரிட்டனிலிருந்து விலகுவது தொடர்பாக 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 55 விழுக்காட்டு எதிர்ப்பு, 45 விழுக்காட்டு ஆதரவு வாக்குகள் பதிவாகியதையடுத்து ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து விலகவில்லை.