வட்டியை உயர்த்தும் வேகத்தைக் குறைப்பதற்கு பெரும்பாலானோர் ஆதரவு
2022-11-24 16:25:16

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளில் பெரும்பாலானோர், வட்டி விகிதத்தை உயர்த்தும் வேகத்தை வெகுவிரையில் குறைக்கும் பக்கத்தில் நிற்கின்றனர். அதன் மூலம், அளவுக்கு மீறி நாணயக் கொள்கையைக் கடுமையாக்குவதால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்க வேண்டும் என்று 23ஆம் நாள் புதன்கிழமை நடைபெற்ற நவம்பர் திங்கள் நாணயக்கொள்கைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் திங்கள் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து வட்டி விகிதம் உயர்த்தப்படக் கூடும். இந்த அளவிலான உயர்வுக்கு 75.8 சதவீதம் சாத்தியம் உள்ளது என்று சந்தையில் பொதுவாக கருதப்படுகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி போதிய அளவிலான முன்னேற்றம் பெறவில்லை. வட்டி உயர்வு வேகத்தைக் குறைப்பதற்கு உண்மையான ஆதாரம் காணப்படவில்லை என்று வங்கி அதிகாரிகளில் சிலர் கருதுகின்றனர்.