சீன-அமெரிக்க மக்களிடையேயான பரிமாற்றம் விரிவாக்கம்:சீனா
2022-11-24 17:22:04

சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் பாலி தீவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின், இரு நாடுகளின் மக்களிடையேயான பரிமாற்றம் அதிகரிக்கப்படுமா பற்றிய கேள்விக்குப் பதில் அளித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மெள நீங் கூறுகையில்,

இரு நாடுகளுக்கிடையே மக்க்ளின் பரிமாற்றம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. பல்வேறு துறைகளில் இரு நாட்டு மக்களிடையேயான தொடர்பை விரிவாக்க ஊக்கமளிக்க வேண்டும். இது, இரு நாட்டு அரசுத் தலைவர்களும் பாலி தீவில் எட்டியுள்ள ஒருமித்த கருத்துகளில் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் இணைந்து, மக்கள் பரிமாற்றத்தை அரசு சாராப் பரிமாற்றத்தையும் முன்னேற்றி, இரு நாட்டுறவின் சீரான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு மக்களின் ஆதரவு என்ற அடிப்படையை உருவாக்க சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.