துருக்கி-கியூபா தலைவர்கள் சந்திப்பு
2022-11-24 17:09:17

துருக்கி அரசுத் தலைவர் தயீப் எர்டோகனும் கியூபா அரசுத் தலைவர் மிகுல் டியஸ் கேனலும் 23ஆம் நாள் துருக்கி தலைநகர் அங்காராவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை அடுத்து, வெளியுறவு, பொருளாதார மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் இரு நாடுகளின் பிரதிநிதிக்குழுக்கள் கையெழுத்திட்டன. 

துருக்கி செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, பேச்சுவார்த்தையின் போது, இரு நாட்டுறவுவின் பல்வேறு துறைகள் பற்றி இரு தரப்பும் விவாதித்துள்ளன. ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி இரு தரப்பு வர்த்தக தொகையை 20கோடி அமெரிக்க டாலராக அதிகரிக்கும் விருப்பத்தை இரு தரப்பும் தெரிவித்துள்ளதாக எர்டோகன் கூறினார்.