சீன-அமெரிக்க வணிகத் துறைத் தலைவர்களிடையே உள்ள பேச்சுவார்த்தை
2022-11-24 20:17:50

சீன வணிகத் துறை அமைச்சர் வாங் வென் தாவும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் தையும், கடந்த வெள்ளிக்கிழமை சந்திப்பு நடத்தியது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஷு யுதிங் அறிமுகப்படுத்தினார்.

நவம்பர் 24ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறுகையில்,

இரு நாட்டு அரசுத் தலைவர்களின் சந்திப்புக்குப் பின், இரு நாடுகளின் வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறையின் பொறுப்பாளர்கள் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தினர். சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரம், பலதரப்பு மற்றும் பிரதேசப் பொருளாதார மற்றும் வர்த்தக்க ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு தரப்பினரும் திறந்த மனப்பான்மையுடனும் ஆக்கப்பூர்வமாகவும் விவாதம் நடத்தினர் என்று அவர் தெரிவித்தார்.