அமெரிக்காவிலிருந்து விலகிச் சென்ற ஐரோப்பிய கூட்டணி நாடுகள்
2022-11-24 15:11:21

பிரான்ஸ் அரசுத் தலைவர் மாளிகையான எலிசி அரண்மனையில் பிரான்ஸ் அரசுத் தலைவர் மார்க் லாங் பல ஐரோப்பிய தொழில்முனைவோர்களுக்கு உள்ளூர் நேரப்படி 21ஆம் நாளிரவு விருந்து அளித்தார்.

எங்கள் நிலத்தில் அமெரிக்கா தொழில்களை வளர்க்கின்றது. ஐரோப்பிய நிறுவனங்களின் நலன்களை நாம் உறுதியாகப் பாதுகாக்க வேண்டும் என்று பிரான்ஸ் நிதி அமைச்சர் புருனோ லெமர் 22ஆம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

உக்ரைன் நெருக்கடி ஏற்பட்ட பிறகு, அமெரிக்காவைப் பின்பற்றியுள்ள ஐரோப்பா, ரஷியாவின் மீதான பல சுற்றுத் தடைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் இதில் ஐரோப்பா மிகப்பெரிய பலியாகிவிட்டது.

ஐரோப்பாவில் எரிசக்தி விலைகள் உயர்ந்து, உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதால், ஐரோப்பிய நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

அமெரிக்க எரிசக்தி விலைகள் ஒப்பீட்டளவில் நிலையானவை. மேலும் பணவீக்கக் குறைப்புச் சட்டத்தின்படி உள்ளூர் நிறுவனங்களுக்கு தாராளமான மானியங்களை அமெரிக்கா வழங்குகிறது. எனவே, பல ஐரோப்பிய நிறுவனங்கள் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளன.

இச்சூழலில் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா மீறியதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஐரோப்பாவின் தொழிற்துறையைப் பாதுகாத்து, அமெரிக்காவின் பணவீக்கக் குறைப்புச் சட்டத்தைப் பிரான்சும் ஜெர்மனியும் கூட்டாகப் புறக்கணிக்கும் என்று 22ஆம் நாள் இவ்விரு நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில்  தெரிவித்தன.

அமெரிக்காவை முன்னிறுத்தும் நடவடிக்கை அதன் கூட்டணி நாடுகளை அமெரிக்காவிலிருந்து விலகிச் செல்ல செய்து வருகின்றது.