துப்பாக்கி வன்முறை அமெரிக்காவில் அதிகரிப்பு
2022-11-25 14:37:10

அமெரிக்காவில் இவ்வாண்டில் நவம்பர் 23ஆம் தேதி வரை 608 துப்பாக்கிச் சூடும் சம்பவங்கள் நடத்தப்பட்டன. அவற்றில், டாக்சாஸ் மாநிலத்தின் யுவல்டி நகரில் நிகழ்ந்த துப்பாக்கி சம்பவத்தில் 21 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.

அமெக்காவைத் தவிர, உலகில் வேறு எங்கும் இது போன்ற மோசமான நிலைமை காணப்படவில்லை  என்று கலிஃபோர்னிய மாநிலத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் ரோப் பொன்டா தெரிவித்தார்.

இவ்வாண்டு அமெரிக்காவில் சுமார் 40 ஆயிரம் பேர் துப்பாக்கி வன்முறையால் உயரிழந்தனர். இருந்தாலும், துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து இரு கட்சிகள் கடும் கருத்து வேற்றுமை கொண்டுள்ளன. துப்பாக்கி தயாரிப்பு வணிகர்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் குழுவுக்கு வலுவான அரசியல் தாக்கம் இருப்பதால், துப்பாக்கி குற்றம் நீங்காமல், மோசமான சுழற்சியில் அமெரிக்கா சிக்கியுள்ளது.