ரஷியாவின் வரலாற்றில் உச்சம் அடைந்த சோயாபீன்ஸ் அறுவடை
2022-11-25 16:20:12

ரஷிய வேளாண்மை அமைச்சகம் 24ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டு ரஷியாவின் சோயாபீன்ஸ் உற்பத்தியளவு 60லட்சம் டன்னை எட்டி வரலாற்றில் காணாத உச்சம் அடைந்தது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 22.6விழுக்காடு அதிகமாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் அந்நாட்டின் சோயாபீன்ஸ் சாகுபடி நிலப்பரப்பு 15லட்சம் ஹெக்டர்களிலிருந்து 35லட்சம் ஹெக்டர்களாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதிச் சந்தையில் பரந்த வாய்ப்பு உள்ளது. மேலும், உலகளவில் சோயாபீன் மற்றும் அதன் தயாரிப்புப் பொருட்கள் மீதான தேவை தொடர்ந்து அதிகரித்துள்ளது அதற்கான காரணிகளாகும்.

இவ்வாண்டு முதல் ரஷியாவிலிருந்த சோயாபீன் ஏற்றுமதியளவு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 44விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.