அடுத்த வாரம் முதல் நிறுத்தப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மீட்டெக்கப்படும்:மஸ்க்
2022-11-25 15:45:52

அடுத்த வாரம் முதல் ட்விட்டரில் முன்னதாகத் தடை செய்யப்பட்ட பெரும்பாலான கணக்குகளை மீட்டெடுக்கத் தொடங்கப்போவதாக எலான் மஸ்க் வியாழக்கிழமை கூறினார்.

மக்கள் பேசியுள்ளனர். பொதுமன்னிப்பு வழங்குதல் அடுத்த வாரம் தொடங்கும் என்று 24ஆம் நாள் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

தடை செய்யப்பட்ட கணக்குகளை மீட்டெடுக்கலாமா என்பது பற்றி புதன்கிழமை ட்விட்டரில் நடைபெற்ற ஒரு பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பில் 31.6 இலட்சம் பேர் பங்கெடுத்தனர். அவர்களில் 72.4 விழுக்காட்டினர் ஆதரவாக வாக்களித்தனர்.

முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப், நகைச்சுவை நடிகர் கேத்தி கிரிஃபின் உள்ளிட்ட சில இடைநிறுத்தப்பட்ட ட்வீட்டர் கணக்குகளை மீட்பதற்கு மஸ்க் கடந்த வாரம் அங்கீகரித்தார்.