2035க்குள் யாங்சி ஆற்றின் மேம்பட்ட துறைமுக அமைப்புமுறை
2022-11-25 09:47:54

சீனாவில் 2035ஆம் ஆண்டுக்குள் நியாயமான உருவரை, மேம்பட்ட செயல்திறன் ஆகியவற்றுடன் கூடிய நவீனமயமான யாங்சி ஆற்றின் துறைமுக அமைப்புமுறை உருவாக்கப்படும் என்று சீனப் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சகம், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் கூட்டாக யாங்சி ஆற்றின் துறைமுக உருவரை, பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டுத் திட்டத்தை அண்மையில் வெளியிட்டன. இதில் துறைமுக உருவரையை மேம்படுத்தி, யாங்சி ஆற்றின் நடு மற்றும் மேல்பகுதியில் துறைமுகக் கூட்டங்களை உருவாக்கி, ஒருமைப்பாட்டு வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.