சந்திரன் ஆய்வுக்காக சாங்ஏ-6 விண்கலத்தின் சர்வதேச ஒத்துழைப்பு பற்றிய முடிவுகள் வெளியீடு
2022-11-25 18:31:55

விண்வெளி ஆய்வு மற்றும் புத்தாக்கத்துக்கான உலகக் கூட்டளியுறவு பற்றிய ஐ.நா-சீன கலந்தாய்வுக் கூட்டம் 24ஆம் நாள் வியாழக்கிழமை சீனாவின் ஹைக்கோவ் நகரில் நடைபெற்றது.

சந்திரன் ஆய்வுக்காக அனுப்பப்படும் சாங்ஏ-6 விண்விலகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான முடிவுகளை, சீனத் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இக்கூட்டத்தில் வெளியிட்டது.

திட்டப்படி, 2025ஆம் ஆண்டுக்கு முன்பு அல்லது பின்பு, சாங்ஏ-6 விண்கலம், சந்திரனுக்கு அனுப்பப்படும். நிலாவின் பின்புறத்தில் மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு கொண்டு வரும்த் திட்டம் செயல்படுத்துப்படும். அப்போது, நிலாவின் சுற்றுப் வட்ட பாதையில் இயங்கும் விண்கலம் மற்றும் தரையிறங்கும் விண்கலன் முறையே சர்வதேச அறிவியல் ஆய்வுக்காக 10 கிலோகிராம் சுமையை ஏற்றிச்செல்ல முடியும். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் நாள் இப்பணியகம் ஒத்துழைப்பு அழைப்பை வெளியிட்டு, இறுதியில் மொத்த 20க்கும் அதிகமான ஒத்துழைப்பு ஆலோசனைகளை பெற்றுள்ளது. இந்த சர்வதேச ஒத்துழைப்புக்காக, தற்போது தொழில்நுட்பம் ரீதியிலான சாத்தியம் வாய்ந்தது.

மேலும், 2026ஆம் ஆண்டுக்கு முன்பு அல்லது பின்பு  அனுப்பப்படும் சாங்ஏ -7 விண்கலம் பற்றிய ஒத்துழைப்பு அழைப்பும் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

2023ஆம் ஆண்டு பிப்வரி 1ஆம் நாள் வரை, இதற்கு ஒத்துழைப்பு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து, ஏப்ரல் திங்கள் வரை முதற்கட்ட தேர்வு நிறைவடையும். ஜுலை திங்கள் இறுதித் தேர்வு வெளியிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.