துருக்கிய-சிரிய எல்லைப் பகுதியில் பதட்டமான நிலைமை
2022-11-25 15:50:26

துருக்கிய-சிரிய எல்லையில் நிலைமை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பதட்டமாக உள்ளது.

உள்ளூர் நேரப்படி 24ஆம் நாள் சிரியாவிலுள்ள குர்திஷ் ஆயுத தளத்தைத் துருக்கி தொடர்ந்து தாக்கியது. இதில் பல மக்கள் காயமடைந்தனர் அல்லது உயிரிழந்தனர் என்று தெரிய வந்துள்ளது.

அச்சுறுத்தல் நீங்கும் வரை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயங்கரவாதத்தைத் துருக்கி தொடர்ந்து எதிர்த்துப் போராடும் என்று துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் 24ஆம் நாள் தெரிவித்தார்.

வடக்கு சிரியாவிலிருந்து வந்த பயங்கரவாத அச்சுறுத்தலை நிரந்தரமாக தடுப்பது துருக்கியின் முதன்மை கடமையாகும் என்று அதே நாள் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் அக்கால் தொலைபேசி மூலம் ரஷிய பாதுகாப்பு அமைச்சர் ஷொய்குவுடன் தொடர்புகொண்ட போது தெரிவித்தார்.

நவம்பர் 13ஆம் நாள் இஸ்தான்புலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 6 பேர் உயிரிழந்து 81 பேர் காயமடைந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.