சீன வணிக அமைச்சர் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி சந்திப்பு
2022-11-25 10:33:04

நவம்பர் 18ஆம் நாள் தாய்லாந்தின் தலைநகரான பாங்காங்கில் நடந்த எபெக் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவோ அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டேய் அம்மையாருடன் சந்திப்பு நடத்தினார். மனம் திறந்த சூழ்நிலையிலும் தொழில் முறையிலும் நடத்தப்பட்ட இச்சந்திப்பு, ஆக்கபூர்வமானது. சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகள், பலதரப்பு பிராந்திய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஷு யூட்டிங் 24ஆம் நாள் கூறினார்.

சீனாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டின் மீதான அமெரிக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தைவான் தொடர்பான பிரச்சினைகள் முதலியவற்றில் வாங் வென்டாவோ கடுமையான கவனம் செலுத்தினார். திறந்த, இணக்கம், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு முன்மொழிவுகளைத் திறந்த மனத்துடன் செயல்படுத்தும் என்று இரு தரப்பினரும் தெரிவித்தாக அவர் கூறினார்.

அமெரிக்கா சீனாவுடன் இணைந்து பாடுபட்டு, இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை ஆரோக்கியமான மற்றும் நிதானமான வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லும் என சீனா விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.