பெய்ஜிங்கில் சீன மற்றும் கியூபா அரசுத் தலைவர்கள் சந்திப்பு
2022-11-25 15:54:07

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கியூபா அரசுத் தலைவர் மிகுல் டியஸ் கேனலும்  25ஆம் நாள் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்

கியூபாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம் பற்றிய ஒத்துழைப்புத் திட்ட வரைவை நடைமுறைப்படுத்தி, சோஷலிச நவீனமயமாக்கக் கட்டுமானத்தை முன்னெடுக்க சீனா   விரும்புகிறது என்று தெரிவித்தார்.

சீனாவுடனான உறவை வளர்ப்பது, கியூபா வெளியுறவுக் கொள்கையில் மிகவும் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம், உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பு, உலக பாதுகாப்பு முன்னெடுப்பு ஆகியவற்றுக்கு ஆதரவு அளித்து வரும் கியூபா,  பிரதேசம் மற்றும் சர்வதேச பலதரப்பு அமைப்புமுறைகளில் சீனாவுடனான  ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்று டியஸ் கேனல் சந்திப்பில் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு புதிய யுகத்தில் சீன – கியூபா கூட்டறிக்கையை இரு தரப்பும் வெளியிட்டன.