தங்கத்தின் கொள்வனவை அதிகரிக்கும் மத்திய வங்கிகள்
2022-11-26 17:00:00

ஜப்பானின் நிக்கேய் என்னும் பொருளாதார நாளேடு அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தின் கையிருப்பை அதிகரித்து வருகின்றன. 2022ஆம் ஆண்டு தங்கத்தின் கொள்வனவு 20ஆவது நூற்றாண்டின் 60ஆம் ஆண்டுகள் தொடங்கிய பிறகு தற்போது உச்ச நிலையை எட்டியுள்ளதாக சர்வதேசப் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

உலகத் தங்கச் சங்கம் நவம்பர் திங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, இவ்வாண்டின் 3வது காலாண்டில், உலகளவில் மத்திய வங்கிகளின் தங்கக் கொள்வனவு 399.3 டன்னாகும். இது கடந்த ஆண்டின் இதேகாலத்தை விட 4 மடங்கு அதிகம்.

உலோக ஆலோசனை நிறுவனம் ஒன்றின் பணியாளர் நிக்கோஸ் கவாலிஸ் கூறுகையில், நிதானமான விலை கொண்ட தங்கம், குடியுரிமை இல்லாத நாணயமாகும். இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தைக் கொள்வனவு செய்யும் என்றார்.