சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மாநாட்டின் எழுச்சி விளக்கக் கூட்டம்
2022-11-26 17:05:58

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மாநாட்டின் எழுச்சி பற்றி ஆப்பிரிக்காவுக்கு விளக்கம் செய்யும் கூட்டத்தையும், 6ஆவது சீன-ஆப்பிரிக்க இளம் தலைவர்களின் கருத்தரங்கையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சர்வதேச தொடர்பு துறை காணொளி வழியாக நடத்தியது. தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், காபோங் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 40க்கும் மேலான நாடுகளின் 60க்கும் மேலான கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகளின் இளம் தலைவர்களும், சிந்தனைக் கிடங்கு மற்றும் சீனாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களின் பிரதிநிதிகளும் என 200க்கும் மேலானோர் இதில் கலந்துகொண்டனர்.

சொந்த நிலைமைக்கிணங்க, நவீன வளர்ச்சி பாதையில் பயணிக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் முயற்சிக்கு சீனா உறுதியாக ஆதரவு அளிக்கும். அரசியல் கட்சி, இளைஞர், வர்த்தகம், பொது மக்கள், செய்தி ஊடகங்கள் ஆகிய துறைகளில் ஆப்பிரிக்காவுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும், சீன-ஆப்பிரிக்க பொது சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றவும், வளரும் நாடுகளின் நலனைப் பேணிக்காக்கவும் சீனா விரும்புகின்றது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சர்வதேச தொடர்பு துறை அமைச்சர் லியு ச்சியன்சாவ் தெரிவித்தார்.