ஜிம்பாபுவேக்கு சீனா கரோனா தடுப்பூசி நன்கொடை
2022-11-26 16:59:40

ஜிம்பாபுவேக்கு சீனா நன்கொடையாக கொடுத்த புதிய தொகுதி கரோனா தடுப்பூசிகள் நவம்பர் 25ஆம் நாள் ஒப்படைக்கப்பட்டன.

மருந்து ஒப்படைப்பு விழாவில், சீனா மீண்டும் கரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக கொடுத்ததற்கு  ஜிம்பாபுவே அரசுத் தலைவரின் மனைவி நன்றி தெரிவித்தார்.

இவ்வாண்டில் ஒரு கோடி கரோனா தடுப்பூசிகளை ஜிம்பாபுவேக்கு நன்கொடையாக அளிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இப்போது வரை 50 இலட்சம் கொடுத்துள்ளது. இரு நாட்டு ஒத்துழைப்புகள் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ள நிலைமையில், எதிர்காலத்தில் மேலதிகமான சாதனைகளைப் பெறும். வேளாண்மை, தூய எரிசக்தி, உயர் நிலை அறிவியல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் பல ஒத்துழைப்பு திட்டங்கள் ஆயத்த நிலையில் உள்ளன என்று அந்நாட்டுக்கான சீனத் தூதர் கோ சாவ்ச்சுன் தெரிவித்தார்.