பசுமை உலகக் கோப்பை போட்டிக்கு துணைபுரியும் சீன வாகனங்கள்
2022-11-26 16:30:31

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் தலைநகர் தோஹாவிலுள்ள சாலைகளில் வந்து செல்லும் பேருந்துகளில் பெரும்பாலும் சீனாவிலிருந்து வந்த புதிய எரியாற்றல் பேருந்துகளாகும். நடப்பு உலகக் கோப்பை போட்டியின்போது போக்குவரத்து சேவையை உத்தரவாதம் செய்யும் முக்கிய ஆற்றலாக இந்த பேருந்துகள் அமைந்துள்ளன. சீனா தயாரிப்பு சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

உலக கோப்பை போட்டிக்காக, சீன நிறுவனம் ஒன்றிலிருந்து கத்தார் 1500 பேருந்துகளை இறக்குமதி செய்தது. இவற்றில் 888 மின்சார பேருந்துகள் அடக்கம். இந்த மின்சாரப் பேருந்துகள் உலகக் கோப்பை போட்டிக்கான வாகனங்களின் மொத்த எண்ணிக்கையில் 25 விழுக்காடு வகிக்கின்றன.

நடப்பு உலக கோப்பை கால்பந்து போட்டிக்குப் பிறகு, சீன மின்சாரப் பேருந்துகள் கத்தாரின் பொது போக்குவரத்து துறையில் முக்கியப் பகுதியாக சேவைபுரியும்.