அமெரிக்காவில் 5 மாதங்கள் குறைந்துள்ள வணிகச் செயல்கள்
2022-11-26 16:34:03

அமெரிக்காவின் புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றின்படி, குறைவான தேவையின் காரணமாக, நவம்பர் வரை அமெரிக்க வணிகச் செயல்கள் 5 மாதங்களாகத் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. நவம்பரில் S&P உலக ஒட்டுமொத்த கொள்முதல் மேலாளர் குறியீடு 46.3ஆக சரிவடைந்தது. 50க்கும் குறைவான குறியீடு, வணிகச் செயலின் சுருக்கத்தை வெளிப்படுத்துகிறது. இதனிடையே, தயாரிப்பு தொழிலின் கொள்முதல் மேலாளர் குறியீடு 47.6ஆகக் குறைந்தது.

S&P  உலக சந்தை தகவல் நிறுவனத்தின் பொருளியலாளர் க்ளீஸ் விலியன்ம்சன் வெளியிட்ட அறிக்கையில், இந்த சூழ்நிலையில் பணவீக்க அழுத்தம் வரும் சில மாதங்களில் தொடர்ந்து தணிவடையும். ஆனால், அதேவேளையில் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் சாத்தியம் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.