மலேசியத் தலைமையமைச்சருக்கு லீ கெச்சியாங் வாழ்த்துச் செய்தி
2022-11-26 15:43:39

மலேசியாவின் புதிய தலைமையமைச்சராகப் பதவி ஏற்றுள்ள இப்ராஹிமுக்கு, சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் நவம்பர் 25ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.

லீ கெச்சியாங் கூறுகையில், இரு நாட்டுறவு சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. இரு தரப்புகளின் அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, கூட்டு நலன் தரும் ஒத்துழைப்பை இடைவிடாமல் ஆழமாக்கி வருவது இரு நாடுகள் மற்றும் பிரதேசத்தின் அமைதிக்கும் செழுமைக்கும் பங்காற்றி வருகிறது. தலைமையமைச்சர் இப்ராஹிம் உடன் இணைந்து இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் வளர்ச்சியை ஊக்குவித்து, சீன-மலேசிய எதிர்காலப் பொதுச் சமூகத்தின் கட்டுமானம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு மேலும் நன்றாக நன்மை புரிய விரும்புகிறேன் என்றார்.