புதிய யுகத்தில் சீன-கியூபா உறவின் வளர்ச்சி
2022-11-26 16:51:58

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட கியூபா கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் முதன்மை இயக்குநரும் அரசுத் தலைவருமான டயஸ் கேனலுடன் நவம்பர் 25ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு கட்சிகள் மற்றும் இரு நாட்டுறவுக்கான அரசியல் வழிகாட்டலைத் தொடர்ந்து வலுப்படுத்தி, புதிய காலத்தில் சீன-கியூபா நட்பார்ந்த உறவை ஆழமாக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

சீன-கியூபா பொதுச் சமூகம், லத்தின் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளுடன் சீனா உருவாக்கிய முதலாவது பொதுச் சமூகமாகும். புதிய யுகத்தில் இரு தரப்பு உறவின் வளர்ச்சிக்கு இது வழிகாட்டியுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது லத்தின் அமெரிக்க மற்றும் கரீபிய நாட்டுத் தலைவராக டயஸ் கேனல் திகழ்கிறார். சோஷலிச நாடுகள் ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றன. வளரும் நாடுகள் ஒன்றுக்கொன்று உதவியளிக்கும் முன்மாதிரியாக சீன-கியூபா உறவு மாறியுள்ளது என்பதை இது காட்டியுள்ளது.

மேலும், மைய நலன்களுடன் தொடர்புடைய விவகாரத்தில் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து, சர்வதேச மற்றும் பிரதேச விவகாரத்தில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்றும் இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.