சீனாவில் தொழிற்துறை வளர்ச்சி
2022-11-27 15:49:47

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் நவம்பர் 27ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிக வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் வருமானம் கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 7.6 விழுக்காடு அதிகரித்து உயர்வேக வளர்ச்சியை நிலைநிறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் பரவல், பொருட்களின் உற்பத்தி விலை குறைவு உள்ளிட்ட பாதிப்புகளால், தொழில் நிறுவனங்களின் லாபம் கடந்த ஆண்டை விட 3 விழுக்காடு குறைந்தது.

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகத்தைச் சேர்ந்த தொழிற்துறை பணிப்பிரிவின் உயர்நிலை புள்ளியியல் நிபுணர் ட்சூ ஹொங் கூறுகையில், அடுத்த கட்டத்தில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பையும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் உயர் பயனுள்ளதாக ஒருங்கிணைத்து, தொழில் சங்கிலி மற்றும் விநியோக சங்கிலியை உத்தரவாதம் செய்து, நிறுவனங்களுக்கான ஆதரவுக் கொள்கைகளைச் செயல்படுத்தி, தொழிற்துறையின் சீரான மீட்சியைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்று கூறினார்.