சிஐஎஸ்-சிஎஸ்டிஓ-எஸ்சிஒ நடத்தும் ராணுவப் பயிற்சி
2022-11-27 16:45:27

சுதந்திர் நாடுகள் கூட்டமைப்பு, கூட்டாண்மை பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு நிபுணர்கள், பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்துவது குறித்து ஒற்றுமையை எட்டியுள்ளனர் என்று சுதந்திர நாடுகள் கூட்டமைப்பின் செயற்குழுத் தலைவர் ஷேர்கெய் லெபெடெவ் நவம்பர் 26ஆம் நாள் தெரிவித்தார்.

சுதந்திர நாடுகள் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு மேற்கொள்வதோடு, கூட்டாண்மை பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் தொடர்பு கொள்கின்றன. பாதுகாப்பு துறையில் சர்வதேச நிபுணர்கள் கூட்டத்தை நடத்தி, பயங்கரவாத எதிர்ப்பு  ராணுவப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று பலதரப்பினரும் ஒப்புகொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.