அமெரிக்காவின் கோட்பாடு மீறல் நடவடிக்கை மீது சீனாவின் கவனம்
2022-11-27 16:36:54

உலக வர்த்தக அமைப்பின் சரக்கு வர்த்தக கவுன்சில் நவம்பர் 24, 25 ஆகிய நாட்களில் ஜெனீவாவில் அதிகாரப்பூர்வ கூட்டம் நடத்தியது. அமெரிக்கா அண்மையில் வெளியிட்ட பணவீக்கம் குறைப்பு மசோதாவிலுள்ள பாகுபாடு மற்றும் முறைகேடு நிலையிலான பல மானிய நடவடிக்கைகள் பற்றியும், உலக அரை மின் கடத்தி தொழில் சங்கிலி மற்றும் வினியோகச் சங்கிலியைச் சீர்குலைக்கும் அதன் கொள்கைகள் குறித்தும், சீனப் பிரதிநிதி உரை நிகழ்த்துகையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் பற்றி விமர்சித்திருந்தார். இது பரந்தளவில் பல தரப்புகளின் கவனத்தை எழுப்பியுள்ளது.

அமெரிக்காவின் பாகுபாடுடைய சில விதிகள், அதிக சலுகையுடன் கூடிய நாடு நடத்துமுறை உள்பட உலக வர்த்தக அமைப்பின் அடிப்படை கோட்பாடுகளை மீறுவதாகச் சந்தேகிக்கப்பட்டுள்ளதோடு, குறிப்பிட்ட தொழிலின் உலக வர்த்தகம் மற்றும் முதலீட்டைத் திரித்துப் புரட்டியுள்ளது. அமெரிக்காவின் கொள்கை, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் வர்த்தக சர்ச்சை ஏற்படும் அபாயத்தை தீவிரப்படுத்தி, காலநிலை மாற்ற சமாளிப்புக்கான உலக முயற்சிக்குத் துணைபுரியாது என்று சீனப் பிரதிநிதி தெரிவித்தார்.

இந்நிலையில், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறையைப் பின்பற்றி, மசோதாவில் பாகுபாடு மற்றும் முறைகேடு நிலையிலான அம்சங்களை ரத்து செய்து, ஜி20 அமைப்புத் தலைவர்களின் பாலி தீவு உச்சிமாநாட்டில் அளித்துள்ள குறிப்பிட்ட வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அமெரிக்காவுக்கு சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.