வெற்றிகரமாக ஏவப்பட்ட சீனாவின் யாவ்கான்-36 செயற்கைக் கோள்
2022-11-28 10:45:58

சீனாவின் சிச்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து, லாங்மார்ச்-2 டி ஏவூர்தி மூலம், சீனாவின் யாவ்கான்-36 செயற்கைக் கோள் பெய்ஜிங் நேரப்படி நவம்பர் 27ஆம் நாளிரவு 8:23 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. செயற்கைக் கோள் தடையின்றி திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழைந்ததுடன், இக்கடமை முழுமையான வெற்றியைப் பெற்றது. இது, லாங்மார்ச் தொகுதியைச் சேர்ந்த ஏவூர்தியின் 451வது கடமையாகும்.