ஆசிய மனித உரிமை மன்றத்தின் சர்வதேச ஆய்வு கூட்டம் நிறைவு
2022-11-28 16:37:04

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமை பற்றிய ஆசிய மனித உரிமை மன்றத்தின் சர்வதேச ஆய்வுக் கூட்டம் 27ஆம் நாள் நிறைவடைந்தது. இதில் கடந்த 10 ஆண்டுகளில், ஆசியாவின் பல்வேறு நாடுகள், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு துறைகளில் எட்டியுள்ள அனுபவங்களும் சாதனைகளும் தொகுக்கப்பட்டதோடு, மனித உரிமைப் பார்வையிலுள்ள சுற்றுச்சூழல் உரிமையையும் கால நிலை மாற்ற பின்னணியிலுள்ள பிரச்சினையை பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் 20க்கும் மேலான நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த அறிஞர்கள் இதில் கலந்துகொண்டனர்.

மனிதர்கள் சந்திக்கின்ற மிக கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றாகவும், 21ஆவது நூற்றாண்டின் மிக முக்கியமான அறைகூவல்களில் ஒன்றாகவும் கால நிலை மாற்றம் திகழ்கின்றது என்று அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.