ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் பறவைக் காய்ச்சல் தாக்கம்
2022-11-28 09:20:02

ஜப்பானின் தென்மேற்கிலுள்ள ககோஷிமா வட்டத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கம் 27ஆம் நாள் உறுதி செய்யப்பட்டது. இவ்வட்டத்தில் மொத்தமாக 4லட்சத்து 70ஆயிரமான கோழிகள் கொல்லப்படத் துவங்கியது. இதுவரை ஜப்பானிலுள்ள பல வட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அதே நாள் தென்கொரியாவின் வாத்து பண்ணையில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அந்நாட்டின் தொடர்புடைய அமைச்சகம் அறிவித்தது. இவ்வாண்டின் இலையுதிர் காலம் முதல், தென் கொரியாவின் 22 வீட்டுப் பறவை வளர்ப்புப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.