CMG தலைவர்-AP தலைவர் காணொலி வழி சந்திப்பு
2022-11-29 16:27:37

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரை துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியோங், நவம்பர் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் இருந்து காணொலி வழியாக அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனத்தின் தலைவர் டேய்சி வீரசிங்கமுடன் சந்திப்பு நடத்தினார். ஊடகப் பொறுப்பு, ஒத்துழைப்புடன் கூடிய தகவல் பரப்பு, ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதம் நடத்தி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.