உலக மிகப் பெரிய உயிருள்ள எரிமலை வெடிப்பு
2022-11-29 12:21:53

உலக மிகப் பெரிய உயிருள்ள எரிமலையான அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்திலுள்ள மௌனா லோவா 27ஆம் நாளிரவு வெடிக்கத் துவங்கியது. இது குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் 28ஆம் நாள் அறிவித்தது.

ஹவாய் தீவு பாதியளவில் மௌனா லோவா எரிமலை அமைந்துள்ளது. பசிபிக் பெருங்கடலை விட இந்த எரிமலை 4169 மீட்டர் அதிக உயரம் கொண்டுள்ளது. கடந்த முறை 1984ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.