உலகப் பொருளாதார மீட்சிக்குத் துணைப் புரிந்த சீனப் பொருளாதார வளர்ச்சி
2022-11-29 18:02:15

சீனப் பொருளாதாரத்தின் தொடர் வளர்ச்சி, உலகப் பொருளாதாரத்துக்கு மேலதிக உயிராற்றல் ஊட்டும் என்று உலக வங்கியின் முன்னாள் பொருளியலாளர் வஜிரா தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஸாவ் லீஜியான் நவம்பர் 29ஆம் நாள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில், சீனப் பொருளாதாரத்தின் சராசரி அதிகரிப்பு விகிதம் 6.6 விழுக்காடாகும். உலகப் பொருளாதார அதிகரிப்பில் அதன் சராசரி பங்கு விகிதம் 30 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நிலவும் சிக்கலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் சீனப் பொருளாதாரம் நிதானமாக வளர்ச்சியடையும் போக்கு மாறாது என்றார்.

தவிரவும், மேலும் பெரும் அளவு, மேலும் பரந்த துறை மற்றும் மேலும் ஆழ்ந்த நிலையிலான திறப்புப் பணியிலும், சீனப் பாணி நவீனமயமாக்கப் பாதையிலும் சீனா ஊன்றி நின்று, உலகப் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்து இயக்காற்றலை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.