வங்கதேசத்தில் ஆற்றுக்குக் கீழ் சுரங்கப் பாதை ஆக்கப்பணி
2022-11-29 19:46:07

வங்கதேசத்தில் சீன தொழில் நிறுவனங்கள் கட்டியமைத்துள்ள கனபுரி ஆற்றுக்கு அடியிலான சுரங்கப் பாதையின் கட்டிமுடிக்கப்பட்டதற்கான விழா அண்மையில் நடைபெற்றது. வங்கதேசத்தில் முதலாவது ஆற்றுக்கு அடியிலான சுரங்கப் பாதையாகவும் தெற்காசியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்கப் பாதையாகவும் இது திகழ்கிறது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாள் சாவ் லிச்சியன் 29ஆம் நாள் கூறுகையில்,

கனபுரி ஆற்றுக்கு அடியிலான சுரங்கப் பாதையின் தென் பகுதி ஆக்கப்பணியின் நிறைவுக்கு சீனா வாழ்த்துகள் என்றார்.

வங்கதேசம்-சீனா-இந்தியா-மியன்மார் பொருளாதார மண்டலத்தில் முக்கியப் பகுதியாக திகழும் இத்திட்டப்பணி, சீனா சுற்றுப்புற நாடுகளுடன் இணைந்து ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாகக் கட்டியமைப்பதில் மற்றொரு முக்கிய சாதனையாகவும் உள்ளது. உள்ளூர் போக்குவரத்து மற்றும் ஆசிய நெடுஞ்சாலை தொடரமைப்பை மேம்படுத்துவதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.