சீனாவின் அன்னிய வர்த்தக வளர்ச்சி
2022-11-29 17:06:58

சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீன கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் சூன்சியௌ நவம்பர் 29ஆம் நாள் கூறுகையில், 4வது காலாண்டில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் மேலும் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. வெளிபுறத்தில் நிலையற்ற தன்மை அதிகரித்து வரும் போதிலும், சீனாவின் வெளிநாட்டு வர்த்தம் நிதானமாக வளரும் போக்கு மாறவில்லை என்றார்.

மேலும், இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை வரலாற்றில் புதிய உயர் நிலையை எட்டியுள்ளது. கரோனா வைரஸ் பரவல், தீவிரமான புவியமைவு அரசியல், வலுவற்ற உலகப் பொருளாதாரம் ஆகியவை கொண்ட சிக்கலான பின்ணணியில், வெளிநாட்டு வர்த்தகத்தை நிதானப்படுத்தும் பணிகளை இக்கவுன்சில் செவ்வனே மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.