சீன-ரஷிய எரிபொருள் வணிக மன்றத்துக்கு ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து கடிதம்
2022-11-29 17:20:32

4ஆவது சீன-ரஷிய எரிபொருள் வணிக மன்றக் கூட்டத்துக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 29ஆம் நாள் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

சீன-ரஷிய நடைமுறை ஒத்துழைப்புகளின் அடிப்படையாகவும், உலக எரிபொருள் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் முக்கிய சக்தியாகவும் இரு நாட்டு எரிபொருள் ஒத்துழைப்பு திகழ்கின்றது. வெளிப்புற இடர்பாட்டையும் அறைகூவல்களையும் சந்திக்கும் போது, இரு நாடுகள் பரிமாற்றத்தை வலுப்படுத்தி, முக்கிய ஒத்துழைப்பு திட்டப்பணிகளை முன்னேற்றி வருகின்றன. ரஷியாவுடன் இணைந்து, மேலும் நெருக்கமான எரிபொருள் ஒத்துழைப்பு கூட்டுறவை வலுப்படுத்தி, எரிபொருளின் தூய்மையான வளர்ச்சியை முன்னேற்றி, சர்வதேச எரிபொருளின் பாதுகாப்பையும் தொழில் சங்கிலி நிதானத்தையும் பேணிக்காக்க சீனா விரும்புகிறது என்று ஷி தெரிவித்தார்.

புத்தினும் இம்மன்றக் கூட்டத்துக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார்.