அறிவியல் ஆய்வு நகரங்களின் வரிசையில் பெய்ஜிங் முதலிடம்
2022-11-29 19:40:14

உலகத் தரவரிசையில் சீனாவின் அறிவியல் ஆய்வு நகரங்களின் இடங்கள் வேகமாக உயர்ந்து வருவதோடு, உலக முன்னணி அறிவியல் ஆய்வு நகரங்களில் பெய்ஜிங் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது என்று பிரிட்டனின் நேச்சர் இதழைச் சேர்ந்த 2022 நேச்சர் குறியீடு-அறிவியல் ஆய்வு நகரங்கள் எனும் இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் முக்கிய நகரங்கள் மற்றும் மாநகரப் பகுதிகளின் 2021ஆம் ஆண்டிற்கான அறிவியல் ஆய்வு விளைவுகள் குறித்து நேச்சர் குறியீடு மேற்கொண்ட ஆய்வு முடிவின்படி, உலக அறிவியல் ஆய்வு நகரங்களில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது. நியூயார்க் மாநகரப் பகுதி தொடர்ந்து 2ஆவது இடத்தில் உள்ளது. சீனாவின் ஷாங்காய் மாநகரம், அமெரிக்காவின் பால்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியைத் தாண்டி, முந்தைய 5ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மேலும், சீனாவின் நான்ஜிங், குவாங்சோ, வூஹான், ஹேஃபெய், ஹாங்சோ, தியன்ஜின் ஆகிய நகரங்களின் இடங்கள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.