நவீனப் பாதையில் கூட்டாக முன்னேறும் சீனா-மங்கோலியா
2022-11-29 20:02:47

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட மங்கோலிய அரசுத் தலைவர் உக்னாகியின் குரேல்சுஹுடன் நவம்பர் 28ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார். நவீனமயமாக்கக் கட்டுமானத்தை முன்னேற்ற இரு தரப்பும் ஒப்புக் கொண்டு, புதிய யுகத்தில் இரு நாட்டுப் பொது சமூகத்தின் உருவாக்கம் பற்றி முக்கிய பொது கருத்தை எட்டினர்.

இரு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், இரு தரப்புறவு பதிய கட்டத்துக்குச் செல்வது என்ற ஆக்கப்பூர்வமான சமிக்கை காட்டப்பட்டுள்ளது.

தற்போது முழு உலகமும் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகிறது. வளர்ச்சியானது, பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் முக்கிய வழிமுறையாகும். சமாதான சக வாழ்வு, ஒன்றுக்கொன்று உதவி, கூட்டு வெற்றி ஆகியவற்றைக் கொண்ட இரு நாட்டுப் பொதுச் சமூகத்தின் கட்டுமானத்தை நோக்கி முயற்சிகளை மேற்கொள்ள இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

16 ஒத்துழைப்பு ஆவணங்களை இரு தரப்பும் உருவாக்கியுள்ளன. சீனாவுக்கான மங்கோலியத் தூதர் கூறுகையில், இரு நாடுகள் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது இரு நாடுகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியது என்றார்.

சீனாவும் மங்கோலியாவும் நவீனமயமாக்கப் பாதையில் ஒன்றாக இணைந்து கூட்டாக முன்னேறி, புதிய யுகத்தில் புதிய வளர்ச்சி அடைவது உறுதி.