சீன-கசகஸ்தான் தலைமையமைச்சர்களின் சந்திப்பு
2022-11-30 10:30:42

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் நவம்பர் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொளி வழியாக கசகஸ்தான் தலைமையமைச்சர் அலிகான் ஸ்மைலோவுடன் சந்திப்பு நடத்தினார். லீக்கெச்சியாங் கூறுகையில், இரு நாட்டுறவை புதிய நிலைக்கு முன்னெடுத்து, பிரதேசத்தின் அமைதி நிலைப்பு மற்றும் வளர்ச்சியைப் பேணிக்காக்க விரும்புவதாக தெரிவித்தார்.

ஸ்மைலோவு கூறுகையில், சீனாவுடனான உறவுக்கு கசகஸ்தான் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இரு நாட்டு தூதாண்மையுறவு அமைக்கப்பட்ட 30ஆம் ஆண்டை வாய்ப்பாக கொண்டு, அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, அரசுகளுக்கிடையே வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, எரியாற்றல், வேளாண்மை உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.