யுனெஸ்கோவின் அருவமான கலாச்சாரப் பாரம்பரிய பட்டியலில் சீனப் பாரம்பரிய தேயிலை தயாரிப்புக் கலை
2022-11-30 13:18:29

சீனாவின் பாரம்பரிய தேயிலை தயாரிப்புக் கலை நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய பழக்க வழக்கங்கள் ஆகியவை, 29ஆம் நாளிரவு ஐ.நா.வின் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இது வரை, யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரியங்களில்  சீனா 43 திட்டப்பணிகளுடன் உலகில் முதலிடம் வகிக்கிறது.