ஜியாங் சேமின் காலமானார்
2022-11-30 19:08:26

வெள்ளணுப் புற்று மற்றும் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக ஜியாங் சேமின், நவம்பர் 30ஆம் நாள் நண்பகல் 12:13 மணிக்கு ஷாங்காயில் காலமானார். அவருக்கு வயது 96.

முழு கட்சி, முழு இராணுவம் மற்றும் அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த சீன மக்களுக்கும் வழங்கப்பட்ட கடிதத்தில் இத்தகவல் அறிவிக்கப்பட்டது.

முழு கட்சி, முழு இராணுவம் மற்றும் அனைத்து தேசிய இனத்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைசிறந்த தலைவராக தோழர் ஜியாங் சேமின் விளங்கினார். அவர் மகத்தான மார்க்ஸிஸ்ட், மகத்தான பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர், அரசியல்வாதி, இராணுவ மற்றும் தூதாண்மை வல்லுநர், நீண்டகால சோதனையைத் தாக்குபிடித்த கம்யூனிஸ்ட் வீரர், சீனத் தனிச்சிறப்புடைய மகத்தான சோஷலிச லட்சியத்தின் தலைசிறந்த தலைவர் என்ற பல பெருமைகளைப் பெற்றவர். சீனக் கம்யூயனிஸ்ட் கட்சியின் 3ஆவது தலைமுறை தலைமைக் குழுவின் மையத் தலைவரும், மூன்று பிரதிநிதித்துவம் என்ற முக்கிய சிந்தனைக்கு வித்திட்டவரும் அவர் ஆவார் என்று இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.