அமெரிக்காவில் பிரான்ஸ் அரசுத் தலைவரின் பயணம்
2022-11-30 13:14:48

பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் 29ஆம் நாள் அமெரிக்காவுக்குச் சென்று நவம்பர் 30முதல் டிசம்பர் 2ஆம் நாள் வரை அந்நாட்டில் 3 நாள் பயணம் மேற்கொள்வார்.

ரஷிய-உக்ரைன் மோதல், அமெரிக்காவின் பணவீக்க குறைப்புச் சட்டத்தால் ஏற்படும் வர்த்தகச் சிக்கல்கள், விண்வெளி, சிவில் பயன்பாட்டிற்கான அணு ஆற்றல், பல்லுயிர் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு தரப்புகளும் விவாதிக்கவுள்ளன. பிரான்ஸ் அரசுத் தலைவராக மக்ரோன் அமெரிக்காவில் 2ஆவது முறை  பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.